குர்ஆன் 5:61 — விருந்து
முற்றிலும் நம்பிக்கையின்றி நுழைந்து, மேலும் முற்றிலும் நம்பிக்கையின்றி வெளியேறும் போதும் அவர்கள் உம்மிடம் வரும்போது, “நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்,” என்று கூறுகின்றார்கள். அவர்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.
[5:60] “கடவுள்-உடைய பார்வையில் எவர்கள் மிகவும் கெட்டவர்கள் என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்.அவர்கள் (மிகவும் இழிவடைந்த) குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாகவும் அவரால் ஆக்கப்படும்வரை அவருடைய கோபத்திற்குள்ளாகி பின்னர் கடவுள்-ஆல் தண்டிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் மிக மிக மோசமானவர்கள், மேலும் நேரான பாதையி லிருந்து வெகுதூரம் விலகிப்போனவர்கள்” என்று கூறுவீராக.
[5:62] அவர்களில் பலர், பாவங்கள் செய்வதற்கும், வரம்புமீறுவதற்கும், மேலும் சட்டத்திற்கு புறம்பான சம்பாத்தியங்களிலிருந்து உண்பதற் கும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.