குர்ஆன் 5:63 — விருந்து
யூத மத போதகர்களும், பாதிரியார்களும் மட்டும் அவர்களுடைய பாவம் நிறைந்த கூற்றுக்களையும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான சம்பாத்தியங்களையும் தடுத்துக் கட்டளையிட்டி ருப்பார்களேயானால்! அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.
[5:62] அவர்களில் பலர், பாவங்கள் செய்வதற்கும், வரம்புமீறுவதற்கும், மேலும் சட்டத்திற்கு புறம்பான சம்பாத்தியங்களிலிருந்து உண்பதற் கும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.
[5:64] “கடவுள்-ன் கை கட்டப்பட்டுள்ளது” என்று கூட யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு நிந்தனையைக் கூறியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். மாறாக அவருடைய கைகள் விசாலமாக திறந்த நிலையில் அவருடைய விருப்பப்படி செலவு செய்து கொண்டிருக்கின்றது. உறுதியாக, உம்முடைய இரட்சகர் உமக்கு வெளிப்படுத்தியவை, அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல் மற்றும் நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கிவிடக் காரணமாகிவிடும். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்தநாள் வரை அவர்களுக்கிடையில் கடும் பகையும், வெறுப்பும் ஏற்படும் படி நாம் செய்துவிட்டோம். அவர்கள் போரின் நெருப்பை மூட்டும் போதெல்லாம் கடவுள் அவற்றை அணைத்து விடுகின்றார். அவர்கள் பூமியில் தீயவர்களாக சுற்றித்திரிகின்றார்கள், மேலும் தீமை செய்பவர்களை கடவுள் வெறுக்கின்றார்.