குர்ஆன் 5:65 — விருந்து
வேதத்தையுடைய மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால் நாம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து மேலும் அவர்களை பேரானந்தமான தோட்டங்களுக்குள் அனுமதிப்போம்.
[5:64] “கடவுள்-ன் கை கட்டப்பட்டுள்ளது” என்று கூட யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு நிந்தனையைக் கூறியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். மாறாக அவருடைய கைகள் விசாலமாக திறந்த நிலையில் அவருடைய விருப்பப்படி செலவு செய்து கொண்டிருக்கின்றது. உறுதியாக, உம்முடைய இரட்சகர் உமக்கு வெளிப்படுத்தியவை, அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல் மற்றும் நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கிவிடக் காரணமாகிவிடும். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்தநாள் வரை அவர்களுக்கிடையில் கடும் பகையும், வெறுப்பும் ஏற்படும் படி நாம் செய்துவிட்டோம். அவர்கள் போரின் நெருப்பை மூட்டும் போதெல்லாம் கடவுள் அவற்றை அணைத்து விடுகின்றார். அவர்கள் பூமியில் தீயவர்களாக சுற்றித்திரிகின்றார்கள், மேலும் தீமை செய்பவர்களை கடவுள் வெறுக்கின்றார்.
[5:66] அவர்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மேலும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்களுக்கு இதில் இறக்கப்பட்டதையும் பின்பற்றி இருப்பார்களேயானால் அவர்களு க்கு மேலிருந்தும், அவர்கள் பாதங்களுக்கு கீழிருந்தும் அவர்கள் அருட்கொடைகளால் பொழியப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவம் செய்பவர்கள்.