குர்ஆன் 5:73 — விருந்து
கடவுள் திரித்துவத்தில் மூன்றாமவர் என்று கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். ஒரு தெய்வத்தைத்தவிர வேறு தெய்வம் இல்லை. இவ்வாறு கூறுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளாதவரை, அவர்களிடையே உள்ள நம்ப மறுப்பவர்கள் ஒரு வேதனை மிகுந்த தண்டனைக் குள்ளாவார்கள்.
[5:72] மேரியின் மகன் மெசையாஹ்வை, கடவுள் என கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். அந்த மெசையாஹ்வே, “இஸ்ரவேலின் சந்ததியரே, என்னுடைய இரட்சகரும்,* உங்களு டைய இரட்சகருமான கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்,” என்றுதான் கூறினார். எவரொருவர் கடவுள்-க்கு இணையை ஏற்படுத்துகின்றாரோ, அவருக்கு கடவுள் சுவனத்தைத் தடை செய்து விட்டார், மேலும் அவருடைய விதி நரகமே. தீயவர்களுக்கு உதவியாளர்கள் இல்லை.
[5:74] அவர்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்தி மேலும் அவரிடம் பாவமன்னிப்பு கேட்கமாட்டார்களா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.