குர்ஆன் 5:74 — விருந்து
அவர்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்தி மேலும் அவரிடம் பாவமன்னிப்பு கேட்கமாட்டார்களா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[5:73] கடவுள் திரித்துவத்தில் மூன்றாமவர் என்று கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். ஒரு தெய்வத்தைத்தவிர வேறு தெய்வம் இல்லை. இவ்வாறு கூறுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளாதவரை, அவர்களிடையே உள்ள நம்ப மறுப்பவர்கள் ஒரு வேதனை மிகுந்த தண்டனைக் குள்ளாவார்கள்.
[5:75] மேரியின் மகனாகிய மெசையாஹ், அவருக்கு முன் வந்த தூதர்கள் போன்ற ஒரு தூதரே அல்லாமல் வேறில்லை. மேலும் அவருடைய தாயார் ஒரு புனிதர் ஆவார். அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். நாம் எவ்வாறு வெளிப்பாடுகளை அவர்களுக்கு விளக்கு கின்றோம் என்பதையும், அவ்வாறு இருந்தபோதும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றார்கள் என்பதையும் கவனித்துப்பாரும்!