Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:75 — விருந்து

மேரியின் மகனாகிய மெசையாஹ், அவருக்கு முன் வந்த தூதர்கள் போன்ற ஒரு தூதரே அல்லாமல் வேறில்லை. மேலும் அவருடைய தாயார் ஒரு புனிதர் ஆவார். அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். நாம் எவ்வாறு வெளிப்பாடுகளை அவர்களுக்கு விளக்கு கின்றோம் என்பதையும், அவ்வாறு இருந்தபோதும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றார்கள் என்பதையும் கவனித்துப்பாரும்!

[5:74] அவர்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்தி மேலும் அவரிடம் பாவமன்னிப்பு கேட்கமாட்டார்களா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[5:76] “உங்களுக்கு எந்த தீங்கும் செய்யவோ அல்லது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவோ சக்தியற்ற இணைகளை கடவுள்-உடன் சேர்த்து வழிபடுவீர்களா? கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.