குர்ஆன் 5:76 — விருந்து
“உங்களுக்கு எந்த தீங்கும் செய்யவோ அல்லது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவோ சக்தியற்ற இணைகளை கடவுள்-உடன் சேர்த்து வழிபடுவீர்களா? கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[5:75] மேரியின் மகனாகிய மெசையாஹ், அவருக்கு முன் வந்த தூதர்கள் போன்ற ஒரு தூதரே அல்லாமல் வேறில்லை. மேலும் அவருடைய தாயார் ஒரு புனிதர் ஆவார். அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். நாம் எவ்வாறு வெளிப்பாடுகளை அவர்களுக்கு விளக்கு கின்றோம் என்பதையும், அவ்வாறு இருந்தபோதும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றார்கள் என்பதையும் கவனித்துப்பாரும்!
[5:77] “வேதத்தையுடைய மக்களே, உண்மைக்குப் புறம்பாக உங்கள் மார்க்கத்தின் எல்லைகளை மீறாதீர்கள், இன்னும் வழிகேட்டிற்குச் சென்று விட்ட மேலும் ஏராளமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்ட மக்களின் அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேரான பாதையில் இருந்து விலகி வழிகேட்டில் வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்” என்று கூறுவீராக.