குர்ஆன் 5:77 — விருந்து
“வேதத்தையுடைய மக்களே, உண்மைக்குப் புறம்பாக உங்கள் மார்க்கத்தின் எல்லைகளை மீறாதீர்கள், இன்னும் வழிகேட்டிற்குச் சென்று விட்ட மேலும் ஏராளமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்ட மக்களின் அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேரான பாதையில் இருந்து விலகி வழிகேட்டில் வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்” என்று கூறுவீராக.
[5:76] “உங்களுக்கு எந்த தீங்கும் செய்யவோ அல்லது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவோ சக்தியற்ற இணைகளை கடவுள்-உடன் சேர்த்து வழிபடுவீர்களா? கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[5:78] டேவிட் மற்றும் மேரியின் மகன் இயேசுவின் நாவால், இஸ்ரவேலின் சந்ததியர்களில் உள்ள நம்பமறுப்பவர்கள் கண்டனம் செய்யப்பட்டார் கள். அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்ததே இதற்குக் காரணமாகும்.