குர்ஆன் 5:82 — விருந்து
நம்பிக்கையாளர்களின் மிக மோசமான எதிரிகளாக யூதர்களையும், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் நம்பிக்கையாளர் களுக்கு நட்பில் மிகவும் நெருக்கமான மக்களாக “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுபவர்கள் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஏனெனில் அவர்களுக்கிடையில் மதகுருமார்களும், பாதிரியார்களும் அவர்களுக்கு இருக்கின்றனர், மேலும் அவர்கள் கர்வமற்றவர்களாக இருக்கின்றனர்.
[5:81] அவர்கள் கடவுள்-ஐயும், மற்றும் வேதம் வழங்கப்பட்டவரையும், மேலும் அவருக்கு இதில் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்பி இருந்தால், அவர்களுடன் நட்புக் கொண்டிருக்கமாட்டார் கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்.
[5:83] தூதருக்கு வெளிப்படுத்தியதை அவர்கள் கேட்கும்போது அதிலுள்ள உண்மையை அவர் கள் அடையாளம் கண்டு கொண்டவர்களாக, அவர்களுடைய கண்களில் கண்ணீர் வெள்ளத் தை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகையால் எங்களை சாட்சியாளர்களுடன் கணக்கிடுவீராக.