Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:83 — விருந்து

தூதருக்கு வெளிப்படுத்தியதை அவர்கள் கேட்கும்போது அதிலுள்ள உண்மையை அவர் கள் அடையாளம் கண்டு கொண்டவர்களாக, அவர்களுடைய கண்களில் கண்ணீர் வெள்ளத் தை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகையால் எங்களை சாட்சியாளர்களுடன் கணக்கிடுவீராக.

[5:82] நம்பிக்கையாளர்களின் மிக மோசமான எதிரிகளாக யூதர்களையும், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் நம்பிக்கையாளர் களுக்கு நட்பில் மிகவும் நெருக்கமான மக்களாக “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுபவர்கள் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஏனெனில் அவர்களுக்கிடையில் மதகுருமார்களும், பாதிரியார்களும் அவர்களுக்கு இருக்கின்றனர், மேலும் அவர்கள் கர்வமற்றவர்களாக இருக்கின்றனர்.

[5:84] “நாங்கள் ஏன் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களிடம் வந்திருக்கக்கூடிய உண்மையின் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடாது, இன்னும் எங்களுடைய இரட்சகர் எங்களை நன்னெறி யான மக்களுடன் ஏற்றுக் கொள்ளக்கூடும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?”