குர்ஆன் 5:84 — விருந்து
“நாங்கள் ஏன் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களிடம் வந்திருக்கக்கூடிய உண்மையின் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடாது, இன்னும் எங்களுடைய இரட்சகர் எங்களை நன்னெறி யான மக்களுடன் ஏற்றுக் கொள்ளக்கூடும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?”
[5:83] தூதருக்கு வெளிப்படுத்தியதை அவர்கள் கேட்கும்போது அதிலுள்ள உண்மையை அவர் கள் அடையாளம் கண்டு கொண்டவர்களாக, அவர்களுடைய கண்களில் கண்ணீர் வெள்ளத் தை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகையால் எங்களை சாட்சியாளர்களுடன் கணக்கிடுவீராக.
[5:85] இதனைக் கூறியதற்காக கடவுள் அவர் களுக்கு வெகுமதியளித்தார்; அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அவர் பிரவேசிக்கச் செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். நன்னெறியாளர்களுக்கு இதுதான் வெகுமதி ஆகும்.