குர்ஆன் 5:81 — விருந்து
அவர்கள் கடவுள்-ஐயும், மற்றும் வேதம் வழங்கப்பட்டவரையும், மேலும் அவருக்கு இதில் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்பி இருந்தால், அவர்களுடன் நட்புக் கொண்டிருக்கமாட்டார் கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்.
[5:80] அவர்களில் பெரும்பாலோர், நம்ப மறுப்பவர்களோடு தங்களைக் கூட்டாளிகளாக்கிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர் களுடைய ஆன்மாக் களுக்காக அவர்களது கைகள் முற்படுத்தி அனுப்பியவை உன்மையில் துக்ககரமானவை ஆகும். கடவுள் அவர்களிடம்கோபம் கொள் கின்றார். மேலும் அதன் விளைவாக அவர்கள் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[5:82] நம்பிக்கையாளர்களின் மிக மோசமான எதிரிகளாக யூதர்களையும், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் நம்பிக்கையாளர் களுக்கு நட்பில் மிகவும் நெருக்கமான மக்களாக “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுபவர்கள் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஏனெனில் அவர்களுக்கிடையில் மதகுருமார்களும், பாதிரியார்களும் அவர்களுக்கு இருக்கின்றனர், மேலும் அவர்கள் கர்வமற்றவர்களாக இருக்கின்றனர்.