குர்ஆன் 5:86 — விருந்து
நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தவர்களைப் பொறுத் தவரை, அவர்கள் நரகவாசிகளாவார்கள்.
[5:85] இதனைக் கூறியதற்காக கடவுள் அவர் களுக்கு வெகுமதியளித்தார்; அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அவர் பிரவேசிக்கச் செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். நன்னெறியாளர்களுக்கு இதுதான் வெகுமதி ஆகும்.
[5:87] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் -ஆல் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்ட நல்ல பொருட் களைத் தடை செய்யாதீர்கள், மேலும் வலுச் சண்டை செய்யாதீர்கள்; வலுச்சண்டை செய்பவர் களைக் கடவுள் வெறுக்கின்றார்.