குர்ஆன் 5:89 — விருந்து
சாதாரணமாகக் கூறும் சத்தியங்களுக்கு கடவுள் உங்களை பொறுப்பாளியாக்க மாட்டார், உங்களுடைய உண்மையான நோக்கங்களுக்கு அவர் உங்களை பொறுப்பாளியாக்குவார். நீங்கள் ஒரு சத்தியத்தை மீறினால், நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்திற்கு எந்த உணவு அளிப்பீர்களோ அதிலிருந்து பத்து ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவர் களுக்கு ஆடை அணிவித்து அல்லது ஒரு அடிமையை விடுவித்து பரிகாரம் செய்ய வேண்டும். இதைச் செய்ய உங்களால் முடியாவிட்டால், பின்னர் நீங்கள் மூன்று நாட்கள் நோன்பு இருக்க வேண்டும். இது நீங்கள் நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்த வாக்குறுதி களை மீறியதற்குப் பிராயச்சித்தமாகும். உங்க ளுடைய சத்தியங்களை நீங்கள் நிறை வேற்றுங்கள். நீங்கள் நன்றி செலுத்தக் கூடிய வர்களாக ஆகும் பொருட்டு, கடவுள் அவரு டைய வெளிப்பாடுகளை இவ்வாறு உங்களுக்கு விளக்குகின்றார்.
[5:88] மேலும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கின்ற நல்லவற்றில் இருந்தும், மேலும் சட்டபூர்வமான வைகளில் இருந்தும் உண்ணுங்கள். எவர் மீது நீங்கள் நம்பிக்கையாளர்களோ அந்தக் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
[5:90] நம்பிக்கை கொண்டோரே, போதையூட்டும் பொருட்களும் மேலும் சூதாட்டமும், மேலும் விக்கிரகங்களின் பலி பீடங்களும், மேலும் அதிர்ஷ்டப் பந்தயங்களும் சாத்தானுடைய அருவருப்பான செயல்களாகும். நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.