Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:21 — சினாய் மலை

நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மேலும் நம்பிக்கையில் அவர்களைப் பின் தொடர்ந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும், நாம் அவர்களுடைய பிள்ளைகளை அவர்களுடன் சேர்ந்து கொள்ளச்செய்வோம். எந்தக் காரியத்திற்கும் அவர்களுக்கு வெகுமதியளிக்க நாம் ஒருபோதும் தவற மாட்டோம். ஒவ்வொரு மனிதரும் அவர் செய்தவற்றிற்குரிய கூலி கொடுக்கப்படுபவராக இருக்கின்றார்.

[52:20] ஆடம்பரமான இருக்கைகளில் அவர்கள் ஓய்வை அனுபவிப்பார்கள், மேலும் அவர்களுக்காக அழகிய துணைகளை நாம் இணை சேர்ப்போம்.

[52:22] அவர்கள் விரும்புகின்ற பழங்கள் மற்றும் இறைச்சிகளை அவர்களுக்கு நாம் வழங்குவோம்.