குர்ஆன் 57:26 — இரும்பு
நாம் நோவாவையும், ஆப்ரஹாமையும் அனுப்பி னோம், மேலும் அவர்களுடைய சந்ததியினருக்கு வேதத்தின் தூதுத்துவத்தையும் மேலும் வேதத்தையும் அளித்தோம். அவர்களில் சிலர் வழிகாட்டப்பட்டவர்களாக இருந்தனர், அதே சமயம் பலர் தீயவர்களாக இருந்தனர்.
[57:25] தெளிவான சான்றுகளால் ஆதரிக்கப்பட்டவர் களாக நம்முடைய தூதர்களை நாம் அனுப்பி னோம், மேலும் மக்கள் நீதியை ஆதரிக்கும் பொருட்டு, வேதத்தையும் சட்டத்தையும் அவர்களுக்கு நாம் இறக்கி அனுப்பினோம். மேலும் நாம் இரும்பை இறக்கி அனுப்பினோம், அதில் பலமும், மேலும் மனிதர்களுக்குப் பல பயன்களும் உள்ளன. இவை அனைத்தும் விசுவாசத்தின் மீது அவருக்கும், அவருடைய தூதருக்கும் ஆதரவளிப்பவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுவதற்காகவேயாகும். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.
[57:27] அவர்களுக்குப் பிறகும், நம்முடைய தூதர்களை நாம் அனுப்பினோம். மேரியின் மகன் இயேசுவை நாம் அனுப்பினோம், மேலும் இன்ஜீலை (சுவிசேஷம்) நாம் அவருக்குத் தந்தோம், மேலும் அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் கனிவையும் கருணையையும் நாம் அமைத் தோம். ஆனால் அவர்களுக்கு நாம் ஒருபோதும் விதித்திராத துறவறத்தை அவர்கள் கண்டு பிடித்துக் கொண்டனர். அவர்களிடம் நாம் செய்யும் படிக்கேட்டதெல்லாம் கடவுள்-ஆல் அங்கீகரிக் கப்பட்ட கட்டளைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் செய்திருக்க வேண்டியவாறு அத்தூதுச் செய்தியை அவர்கள் உறுதியாகக் கடைபிடிக்கவில்லை. அதன் விளைவாக, அவர்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுக்குரிய பிரதிபலனை நாம் கொடுத்தோம், அதே சமயம் அவர்களில் பலர் தீயவர்களாகவே இருந்தனர்.