குர்ஆன் 6:134 — கால்நடை
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்தே தீரும், அதை நீங்கள் ஒருபோதும் தவிர்த்து விட முடியாது.
[6:133] உங்களுடைய இரட்சகர்தான் செல்வந்தர்; அனைத்துக் கருணையும் கொண்டவர் அவர் நாடினால், எவ்வாறு மற்ற மக்களின் சந்ததியர் களாக உங்களை உருவாக்கினாரோ, அதே போல் உங்களை நீக்கிவிட்டு உங்களுடைய இடத்தில், அவர் நாடுவோரை உங்களுக்குப் பதிலாக வைக்க அவரால் இயலும்.
[6:135] “என்னுடைய மக்களே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள், மேலும் எனக்குச் சிறந்ததை நான் செய்வேன். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயமாக கண்டுகொள்வீர்கள்” என்று கூறுவீராக. நிச்சயமாக, தீயவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்.