குர்ஆன் 6:135 — கால்நடை
“என்னுடைய மக்களே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள், மேலும் எனக்குச் சிறந்ததை நான் செய்வேன். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயமாக கண்டுகொள்வீர்கள்” என்று கூறுவீராக. நிச்சயமாக, தீயவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்.
[6:134] உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்தே தீரும், அதை நீங்கள் ஒருபோதும் தவிர்த்து விட முடியாது.
[6:136] அவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களான விளைச்சல்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய வற்றிலிருந்தும் ஒரு பங்கை தங்களுடைய தகுதிக்கு ஏற்ப, “இந்தப் பங்கு கடவுள்-க்கு உரியது”, “மேலும் இந்தப்பங்கு எங்கள் இணைத் தெய்வங்களுக்கு உரியது”, என்று கூறியவர் களாக ஒதுக்கியும் வைக்கின்றனர், ஆயினும், அவர்களுடைய இணைத் தெய்வங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்கு ஒருபோதும் கடவுள்-ஐ அடைவதில்லை, அதேசமயம் கடவுள்-க்கு என அவர்களால் ஒதுக்கப்பட்ட பங்கு தவறாமல் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கே சென்றது. அவர் களுடைய தீர்ப்பு உண்மையில் இழிவானதாகும்.