Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:136 — கால்நடை

وَجَعَلوا لِلَّهِ مِمّا ذَرَأَ مِنَ الحَرثِ وَالأَنعٰمِ نَصيبًا فَقالوا هٰذا لِلَّهِ بِزَعمِهِم وَهٰذا لِشُرَكائِنا ۖ فَما كانَ لِشُرَكائِهِم فَلا يَصِلُ إِلَى اللَّهِ ۖ وَما كانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلىٰ شُرَكائِهِم ۗ ساءَ ما يَحكُمونَ

அவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களான விளைச்சல்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய வற்றிலிருந்தும் ஒரு பங்கை தங்களுடைய தகுதிக்கு ஏற்ப, “இந்தப் பங்கு கடவுள்-க்கு உரியது”, “மேலும் இந்தப்பங்கு எங்கள் இணைத் தெய்வங்களுக்கு உரியது”, என்று கூறியவர் களாக ஒதுக்கியும் வைக்கின்றனர், ஆயினும், அவர்களுடைய இணைத் தெய்வங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்கு ஒருபோதும் கடவுள்-ஐ அடைவதில்லை, அதேசமயம் கடவுள்-க்கு என அவர்களால் ஒதுக்கப்பட்ட பங்கு தவறாமல் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கே சென்றது. அவர் களுடைய தீர்ப்பு உண்மையில் இழிவானதாகும்.

[6:135] “என்னுடைய மக்களே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள், மேலும் எனக்குச் சிறந்ததை நான் செய்வேன். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயமாக கண்டுகொள்வீர்கள்” என்று கூறுவீராக. நிச்சயமாக, தீயவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்.

[6:137] இவ்வாறு இணைத் தெய்வங்களை வழிபடு பவர்கள், அவர்களுடைய சொந்தக் குழந்தைகளையே* கொல்லும் அளவிற்கு அவர்களுடைய இணைத் தெய்வங்களால் ஏமாற்றப் பட்டனர். உண்மையில், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் பெரும் வேதனையை அவர்களின் மீது சுமத்துகின்றன, மேலும் அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களைக் குழப்பிவிடுகின்றன. கடவுள் நாடியிருந்தால், அவர் கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். அவர் களையும், அவர்களுடைய இட்டுக் கட்டல்களையும் நீங்கள் அலட்சியம் செய்து விட வேண்டும்.