குர்ஆன் 6:137 — கால்நடை
இவ்வாறு இணைத் தெய்வங்களை வழிபடு பவர்கள், அவர்களுடைய சொந்தக் குழந்தைகளையே* கொல்லும் அளவிற்கு அவர்களுடைய இணைத் தெய்வங்களால் ஏமாற்றப் பட்டனர். உண்மையில், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் பெரும் வேதனையை அவர்களின் மீது சுமத்துகின்றன, மேலும் அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களைக் குழப்பிவிடுகின்றன. கடவுள் நாடியிருந்தால், அவர் கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். அவர் களையும், அவர்களுடைய இட்டுக் கட்டல்களையும் நீங்கள் அலட்சியம் செய்து விட வேண்டும்.
[6:136] அவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களான விளைச்சல்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய வற்றிலிருந்தும் ஒரு பங்கை தங்களுடைய தகுதிக்கு ஏற்ப, “இந்தப் பங்கு கடவுள்-க்கு உரியது”, “மேலும் இந்தப்பங்கு எங்கள் இணைத் தெய்வங்களுக்கு உரியது”, என்று கூறியவர் களாக ஒதுக்கியும் வைக்கின்றனர், ஆயினும், அவர்களுடைய இணைத் தெய்வங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்கு ஒருபோதும் கடவுள்-ஐ அடைவதில்லை, அதேசமயம் கடவுள்-க்கு என அவர்களால் ஒதுக்கப்பட்ட பங்கு தவறாமல் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கே சென்றது. அவர் களுடைய தீர்ப்பு உண்மையில் இழிவானதாகும்.
[6:138] அவர்கள், “இவை தடுக்கப்பட்டுள்ள கால் நடைகளும், விளைச்சல்களும் ஆகும், எங்களுடைய அனுமதியைப் பெற்றவர்களைத் தவிர வேறெவரும் அவற்றிலிருந்து உண்ணக்கூடாது,” என்று கூறினார்கள், இவ்வாறு அவர்கள் உரிமை கோரினார்கள். குறிப்பிட்ட கால்நடைகளின் மீது சவாரி செய்வதையும் அவர்கள் தடை செய்தனர். அவர்கள் சாப்பிட்ட கால்நடைகளைக்கூட அவற்றைப் பலியிடும் போது அவர்கள் கடவுள்-ன் பெயரை ஒரு போதும் உச்சரித்ததில்லை. இத்தகையவை அவர் மேல் இட்டுக்கட்டப்பட்டப் புதுமைகள் ஆகும். அவர்களுடையப் புதுமைகளுக்காக அவர் நிச்சயம் அவர்களைப் பழிவாங்குபவர்.