Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:138 — கால்நடை

அவர்கள், “இவை தடுக்கப்பட்டுள்ள கால் நடைகளும், விளைச்சல்களும் ஆகும், எங்களுடைய அனுமதியைப் பெற்றவர்களைத் தவிர வேறெவரும் அவற்றிலிருந்து உண்ணக்கூடாது,” என்று கூறினார்கள், இவ்வாறு அவர்கள் உரிமை கோரினார்கள். குறிப்பிட்ட கால்நடைகளின் மீது சவாரி செய்வதையும் அவர்கள் தடை செய்தனர். அவர்கள் சாப்பிட்ட கால்நடைகளைக்கூட அவற்றைப் பலியிடும் போது அவர்கள் கடவுள்-ன் பெயரை ஒரு போதும் உச்சரித்ததில்லை. இத்தகையவை அவர் மேல் இட்டுக்கட்டப்பட்டப் புதுமைகள் ஆகும். அவர்களுடையப் புதுமைகளுக்காக அவர் நிச்சயம் அவர்களைப் பழிவாங்குபவர்.

[6:137] இவ்வாறு இணைத் தெய்வங்களை வழிபடு பவர்கள், அவர்களுடைய சொந்தக் குழந்தைகளையே* கொல்லும் அளவிற்கு அவர்களுடைய இணைத் தெய்வங்களால் ஏமாற்றப் பட்டனர். உண்மையில், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் பெரும் வேதனையை அவர்களின் மீது சுமத்துகின்றன, மேலும் அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களைக் குழப்பிவிடுகின்றன. கடவுள் நாடியிருந்தால், அவர் கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். அவர் களையும், அவர்களுடைய இட்டுக் கட்டல்களையும் நீங்கள் அலட்சியம் செய்து விட வேண்டும்.

[6:139] அவர்கள், “ இந்த கால்நடைகளின் வயிறுகளில் உள்ளவை எங்களில் உள்ள ஆடவர்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டவை, மேலும் எங்கள் மனைவியருக்குத் தடுக்கப்பட்டவை” என்றும் கூட கூறினார்கள். ஆனால் அது செத்துப் பிறந்திருந்தால் அவர்களுடைய மனைவியரை அதில் பங்கு கொள்ள அனுமதிக்கின்றனர். அவர்களுடையப் புதுமைகளுக்காக, அவர்களை அவர் நிச்சயம் பழி வாங்குவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.