குர்ஆன் 6:139 — கால்நடை
அவர்கள், “ இந்த கால்நடைகளின் வயிறுகளில் உள்ளவை எங்களில் உள்ள ஆடவர்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டவை, மேலும் எங்கள் மனைவியருக்குத் தடுக்கப்பட்டவை” என்றும் கூட கூறினார்கள். ஆனால் அது செத்துப் பிறந்திருந்தால் அவர்களுடைய மனைவியரை அதில் பங்கு கொள்ள அனுமதிக்கின்றனர். அவர்களுடையப் புதுமைகளுக்காக, அவர்களை அவர் நிச்சயம் பழி வாங்குவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:138] அவர்கள், “இவை தடுக்கப்பட்டுள்ள கால் நடைகளும், விளைச்சல்களும் ஆகும், எங்களுடைய அனுமதியைப் பெற்றவர்களைத் தவிர வேறெவரும் அவற்றிலிருந்து உண்ணக்கூடாது,” என்று கூறினார்கள், இவ்வாறு அவர்கள் உரிமை கோரினார்கள். குறிப்பிட்ட கால்நடைகளின் மீது சவாரி செய்வதையும் அவர்கள் தடை செய்தனர். அவர்கள் சாப்பிட்ட கால்நடைகளைக்கூட அவற்றைப் பலியிடும் போது அவர்கள் கடவுள்-ன் பெயரை ஒரு போதும் உச்சரித்ததில்லை. இத்தகையவை அவர் மேல் இட்டுக்கட்டப்பட்டப் புதுமைகள் ஆகும். அவர்களுடையப் புதுமைகளுக்காக அவர் நிச்சயம் அவர்களைப் பழிவாங்குபவர்.
[6:140] தங்களுடைய அறிவுக் குறைபாட்டின் காரணமாக, தங்களுடைய குழந்தைகளை முட்டாள்தனமாக கொலை செய்த, மேலும் கடவுள் அவர்களுக்காக வழங்கியவற்றைத் தடைசெய்த, மேலும் கடவுள் மேல் இட்டுக் கட்டப்பட்ட புதுமைகளை பின்பற்றிய இவர்கள் தான் உண்மையில் நஷ்டவாளிகள். அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டனர்; அவர்கள் வழிநடத்தப் பட்டவர்களல்ல.