குர்ஆன் 6:140 — கால்நடை
தங்களுடைய அறிவுக் குறைபாட்டின் காரணமாக, தங்களுடைய குழந்தைகளை முட்டாள்தனமாக கொலை செய்த, மேலும் கடவுள் அவர்களுக்காக வழங்கியவற்றைத் தடைசெய்த, மேலும் கடவுள் மேல் இட்டுக் கட்டப்பட்ட புதுமைகளை பின்பற்றிய இவர்கள் தான் உண்மையில் நஷ்டவாளிகள். அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டனர்; அவர்கள் வழிநடத்தப் பட்டவர்களல்ல.
[6:139] அவர்கள், “ இந்த கால்நடைகளின் வயிறுகளில் உள்ளவை எங்களில் உள்ள ஆடவர்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டவை, மேலும் எங்கள் மனைவியருக்குத் தடுக்கப்பட்டவை” என்றும் கூட கூறினார்கள். ஆனால் அது செத்துப் பிறந்திருந்தால் அவர்களுடைய மனைவியரை அதில் பங்கு கொள்ள அனுமதிக்கின்றனர். அவர்களுடையப் புதுமைகளுக்காக, அவர்களை அவர் நிச்சயம் பழி வாங்குவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:141] பந்தல்களில் படரவிடப்பட்டதும், படரவிடப் படாததுமான தோட்டங்களையும், மேலும் பேரீத்த மரங்களையும், மேலும் வெவ்வேறு சுவைகளை யுடைய விளைச்சல்களையும், மேலும் ஒலிவத் தையும், மேலும் மாதுளையையும், ஒரே மாதிரியானவை களாக இருந்த போதிலும் வெவ்வேறானவைகளான கனிகளையும் நிர்மானித்தவர் அவரே ஆவார். அவற்றின் கனிகளிலிருந்து உண்ணுங்கள், மேலும் கொடுக்கப்படவேண்டிய தர்மத்தை அறுவடை நாளின் போதே கொடுத்து விடுங்கள்,* மேலும் எதனையும் வீணாக்காதீர்கள். வீணாக்குபவர் களை அவர் நேசிப்பதில்லை.