குர்ஆன் 6:141 — கால்நடை
பந்தல்களில் படரவிடப்பட்டதும், படரவிடப் படாததுமான தோட்டங்களையும், மேலும் பேரீத்த மரங்களையும், மேலும் வெவ்வேறு சுவைகளை யுடைய விளைச்சல்களையும், மேலும் ஒலிவத் தையும், மேலும் மாதுளையையும், ஒரே மாதிரியானவை களாக இருந்த போதிலும் வெவ்வேறானவைகளான கனிகளையும் நிர்மானித்தவர் அவரே ஆவார். அவற்றின் கனிகளிலிருந்து உண்ணுங்கள், மேலும் கொடுக்கப்படவேண்டிய தர்மத்தை அறுவடை நாளின் போதே கொடுத்து விடுங்கள்,* மேலும் எதனையும் வீணாக்காதீர்கள். வீணாக்குபவர் களை அவர் நேசிப்பதில்லை.
[6:140] தங்களுடைய அறிவுக் குறைபாட்டின் காரணமாக, தங்களுடைய குழந்தைகளை முட்டாள்தனமாக கொலை செய்த, மேலும் கடவுள் அவர்களுக்காக வழங்கியவற்றைத் தடைசெய்த, மேலும் கடவுள் மேல் இட்டுக் கட்டப்பட்ட புதுமைகளை பின்பற்றிய இவர்கள் தான் உண்மையில் நஷ்டவாளிகள். அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டனர்; அவர்கள் வழிநடத்தப் பட்டவர்களல்ல.
[6:142] சில கால்நடைகளைக் கொண்டு உங்களுடைய போக்குவரத்துத் தேவைகளும் அதேபோல் படுக்கை சாதனங்களின் தேவைகளும் நிறைவு செய்யப்படு கின்றன. உங்களுக்குரிய கடவுள்-ன் வாழ் வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் சாத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; அவன் உங்களுக்கு மிகத் தீவிரமான விரோதி யாவான்.