குர்ஆன் 6:142 — கால்நடை
சில கால்நடைகளைக் கொண்டு உங்களுடைய போக்குவரத்துத் தேவைகளும் அதேபோல் படுக்கை சாதனங்களின் தேவைகளும் நிறைவு செய்யப்படு கின்றன. உங்களுக்குரிய கடவுள்-ன் வாழ் வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் சாத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; அவன் உங்களுக்கு மிகத் தீவிரமான விரோதி யாவான்.
[6:141] பந்தல்களில் படரவிடப்பட்டதும், படரவிடப் படாததுமான தோட்டங்களையும், மேலும் பேரீத்த மரங்களையும், மேலும் வெவ்வேறு சுவைகளை யுடைய விளைச்சல்களையும், மேலும் ஒலிவத் தையும், மேலும் மாதுளையையும், ஒரே மாதிரியானவை களாக இருந்த போதிலும் வெவ்வேறானவைகளான கனிகளையும் நிர்மானித்தவர் அவரே ஆவார். அவற்றின் கனிகளிலிருந்து உண்ணுங்கள், மேலும் கொடுக்கப்படவேண்டிய தர்மத்தை அறுவடை நாளின் போதே கொடுத்து விடுங்கள்,* மேலும் எதனையும் வீணாக்காதீர்கள். வீணாக்குபவர் களை அவர் நேசிப்பதில்லை.
[6:143] எட்டு வகைக் கால் நடைகள்: செம்மறியாட்டின் இரு வகைகள் மற்றும் வெள்ளாட்டின் இருவகை கள் குறித்து, “இரு ஆணாடுகளையோ, அல்லது இரு பெட்டைகளையோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளாரா? நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறுவீராக.