Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:143 — கால்நடை

எட்டு வகைக் கால் நடைகள்: செம்மறியாட்டின் இரு வகைகள் மற்றும் வெள்ளாட்டின் இருவகை கள் குறித்து, “இரு ஆணாடுகளையோ, அல்லது இரு பெட்டைகளையோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளாரா? நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறுவீராக.

[6:142] சில கால்நடைகளைக் கொண்டு உங்களுடைய போக்குவரத்துத் தேவைகளும் அதேபோல் படுக்கை சாதனங்களின் தேவைகளும் நிறைவு செய்யப்படு கின்றன. உங்களுக்குரிய கடவுள்-ன் வாழ் வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் சாத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; அவன் உங்களுக்கு மிகத் தீவிரமான விரோதி யாவான்.

[6:144] இரு வகையான ஒட்டகங்கள் மற்றும் இரு வகையான கால்நடைகள் குறித்து, இரு ஆண்களையோ அல்லது இரு பெட்டைகளை யோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங் களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளா ரா? இத்தகைய தடைகளை உங்களுக்கு கடவுள் விதித்த போது நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? இத்தகைய பொய்களைக் கண்டு பிடித்தவர்களையும் அதனை கடவுள் மேல் இட்டுக்கட்டியவர்களையும் விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் இவ்வாறு அறிவில்லாது மக்களைத் தவறாக வழி நடத்து கின்றனர். கடவுள் இத்தகைய தீயவர்களை வழி நடத்துவதில்லை” என்று கூறுவீராக.