குர்ஆன் 6:144 — கால்நடை
இரு வகையான ஒட்டகங்கள் மற்றும் இரு வகையான கால்நடைகள் குறித்து, இரு ஆண்களையோ அல்லது இரு பெட்டைகளை யோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங் களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளா ரா? இத்தகைய தடைகளை உங்களுக்கு கடவுள் விதித்த போது நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? இத்தகைய பொய்களைக் கண்டு பிடித்தவர்களையும் அதனை கடவுள் மேல் இட்டுக்கட்டியவர்களையும் விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் இவ்வாறு அறிவில்லாது மக்களைத் தவறாக வழி நடத்து கின்றனர். கடவுள் இத்தகைய தீயவர்களை வழி நடத்துவதில்லை” என்று கூறுவீராக.
[6:143] எட்டு வகைக் கால் நடைகள்: செம்மறியாட்டின் இரு வகைகள் மற்றும் வெள்ளாட்டின் இருவகை கள் குறித்து, “இரு ஆணாடுகளையோ, அல்லது இரு பெட்டைகளையோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளாரா? நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறுவீராக.
[6:145] “எனக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில் எந்த ஒரு உணவும் உண்ணக்கூடிய எவருக்கும் இவற்றைத் தவிர தடைசெய்யப்பட்டதாக நான் காணவில்லை, (1) இறந்தவற்றின் இறைச்சி (2) ஓடுகின்ற இரத்தம், (3) பன்றிகளின் இறைச்சி,* ஏனெனில் அது அசுத்தமாக இருப்பதால் மேலும் (4) கடவுள் அல்லாத மற்றவர்களுக்கு இறை நிந்தனையாக அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சி,” என்று கூறுவீராக. வேண்டுமென்றோ அல்லது கெட்ட எண்ணத் துடனோ இல்லாத நிலையில் ஒருவர் (இவற்றை உண்பதற்கு) நிர்பந்திக்கப்பட்டால், பின்னர் உங்களுடைய இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.