Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:145 — கால்நடை

“எனக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில் எந்த ஒரு உணவும் உண்ணக்கூடிய எவருக்கும் இவற்றைத் தவிர தடைசெய்யப்பட்டதாக நான் காணவில்லை, (1) இறந்தவற்றின் இறைச்சி (2) ஓடுகின்ற இரத்தம், (3) பன்றிகளின் இறைச்சி,* ஏனெனில் அது அசுத்தமாக இருப்பதால் மேலும் (4) கடவுள் அல்லாத மற்றவர்களுக்கு இறை நிந்தனையாக அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சி,” என்று கூறுவீராக. வேண்டுமென்றோ அல்லது கெட்ட எண்ணத் துடனோ இல்லாத நிலையில் ஒருவர் (இவற்றை உண்பதற்கு) நிர்பந்திக்கப்பட்டால், பின்னர் உங்களுடைய இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[6:144] இரு வகையான ஒட்டகங்கள் மற்றும் இரு வகையான கால்நடைகள் குறித்து, இரு ஆண்களையோ அல்லது இரு பெட்டைகளை யோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங் களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளா ரா? இத்தகைய தடைகளை உங்களுக்கு கடவுள் விதித்த போது நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? இத்தகைய பொய்களைக் கண்டு பிடித்தவர்களையும் அதனை கடவுள் மேல் இட்டுக்கட்டியவர்களையும் விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் இவ்வாறு அறிவில்லாது மக்களைத் தவறாக வழி நடத்து கின்றனர். கடவுள் இத்தகைய தீயவர்களை வழி நடத்துவதில்லை” என்று கூறுவீராக.

[6:146] நாம் யூதர்களாக இருப்பவர்களுக்கு பிளவு படாத குளம்புகளுடைய பிராணிகளை தடை செய்தோம்: மேலும் கால்நடைகள் மற்றும் செம்மறியாட்டினுடைய கொழுப்பை நாம் தடை செய்தோம். அவற்றின் முதுகுகளின் மேலுள்ள வை அல்லது உள்ளுறுப்புகளில் உள்ளவை அல்லது எலும்புகளோடு கலந்திருப்பவை தவிர, அது அவர்களுடைய வரம்புமீறல்களுக்கான தண்டனையாக இருந்தது, மேலும் நாம் உண்மையே கூறுகின்றோம்.