குர்ஆன் 6:152 — கால்நடை
அநாதைகளின் பணத்தை அவர்கள் முதிர்ச்சி அடையும் வரையில், நன்னெறிமிக்க முறை யிலன்றி நீங்கள் தொடக்கூடாது. நீங்கள் வியாபாரம் செய்யும்போது, நியாயத்தோடு முழு எடையையும், முழு அளவையும் நீங்கள் கொடுக்க வேண்டும். எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் சக்திக்கு மேல் நாம் சுமத்துவ தில்லை. உங்களுடைய உறவினர்களுக்கு எதிரானாலும் கூட, நீங்கள் சாட்சி சொல்லும் போது முற்றிலும் நீதத்தோடு நீங்கள் இருக்க வேண்டும். கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:151] “வாருங்கள், உங்களுடைய இரட்சகர் உண்மையாகவே உங்களுக்குத் தடை செய்திருப்பவற்றை நான் உங்களுக்குக் கூறுகின்றேன் : அவருடன் இணைத்தெய்வங் களை நீங்கள் ஏற்படுத்தக் கூடாது. உங்களு டைய பெற்றோர்களை நீங்கள் கண்ணியப் படுத்தவேண்டும். வறுமைக்கு அஞ்சி உங்களு டைய குழந்தைகளை நீங்கள் கொலை செய்யக் கூடாது-நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் வழங்குகின்றோம். வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் பாவங்களை நீங்கள் செய்யக்கூடாது. நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி-நீங்கள் கொலை செய்யக்கூடாது- கடவுள் உயிரைப் புனிதமாக்கியுள்ளார். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகள் ஆகும்” என்று கூறுவீராக.
[6:153] இது என்னுடைய பாதையாகும் - நேரான ஒன்று. நீங்கள் இதனை பின்பற்ற வேண்டும், மேலும் அவருடைய பாதையிலிருந்து உங்களை அவை திருப்பிவிடாதிருக்கும் பொருட்டு, மற்ற பாதைகள் எதனையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.