குர்ஆன் 6:153 — கால்நடை
இது என்னுடைய பாதையாகும் - நேரான ஒன்று. நீங்கள் இதனை பின்பற்ற வேண்டும், மேலும் அவருடைய பாதையிலிருந்து உங்களை அவை திருப்பிவிடாதிருக்கும் பொருட்டு, மற்ற பாதைகள் எதனையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:152] அநாதைகளின் பணத்தை அவர்கள் முதிர்ச்சி அடையும் வரையில், நன்னெறிமிக்க முறை யிலன்றி நீங்கள் தொடக்கூடாது. நீங்கள் வியாபாரம் செய்யும்போது, நியாயத்தோடு முழு எடையையும், முழு அளவையும் நீங்கள் கொடுக்க வேண்டும். எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் சக்திக்கு மேல் நாம் சுமத்துவ தில்லை. உங்களுடைய உறவினர்களுக்கு எதிரானாலும் கூட, நீங்கள் சாட்சி சொல்லும் போது முற்றிலும் நீதத்தோடு நீங்கள் இருக்க வேண்டும். கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:154] மேலும் தங்களுடைய இரட்சகரின் சந்திப்பின் மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளும் பொருட்டு சிறந்த கட்டளைகளோடு, முழுமையாகவும் மேலும் அனைத்தையும் விவரிக்கக் கூடியதாகவும், மேலும் வழிகாட்டக் கூடியதாகவும், கருணையாகவும் உள்ள வேதத்தை மோஸஸிற்கு நாம் கொடுத்தோம்.