குர்ஆன் 6:154 — கால்நடை
மேலும் தங்களுடைய இரட்சகரின் சந்திப்பின் மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளும் பொருட்டு சிறந்த கட்டளைகளோடு, முழுமையாகவும் மேலும் அனைத்தையும் விவரிக்கக் கூடியதாகவும், மேலும் வழிகாட்டக் கூடியதாகவும், கருணையாகவும் உள்ள வேதத்தை மோஸஸிற்கு நாம் கொடுத்தோம்.
[6:153] இது என்னுடைய பாதையாகும் - நேரான ஒன்று. நீங்கள் இதனை பின்பற்ற வேண்டும், மேலும் அவருடைய பாதையிலிருந்து உங்களை அவை திருப்பிவிடாதிருக்கும் பொருட்டு, மற்ற பாதைகள் எதனையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:155] நாம் வெளிப்படுத்தியுள்ள இதுவும் பாக்கியமிக்கதொரு வேதமாகும்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் இதனை பின்பற்றி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்த வேண்டும்.