குர்ஆன் 6:155 — கால்நடை
நாம் வெளிப்படுத்தியுள்ள இதுவும் பாக்கியமிக்கதொரு வேதமாகும்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் இதனை பின்பற்றி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்த வேண்டும்.
[6:154] மேலும் தங்களுடைய இரட்சகரின் சந்திப்பின் மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளும் பொருட்டு சிறந்த கட்டளைகளோடு, முழுமையாகவும் மேலும் அனைத்தையும் விவரிக்கக் கூடியதாகவும், மேலும் வழிகாட்டக் கூடியதாகவும், கருணையாகவும் உள்ள வேதத்தை மோஸஸிற்கு நாம் கொடுத்தோம்.
[6:156] “இப்பொழுது, எங்களுக்கு முன்னிருந்த இரு கூட்டத்தாருக்குதான் வேதம் இறக்கப்பட்டது, மேலும் அவற்றின் உபதேசங்களை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்,” என்று இனிமேலும் நீங்கள் கூற முடியாது.