குர்ஆன் 6:39 — கால்நடை
நம்முடைய சான்றுகளை மறுப்பவர்கள் முழு இருட்டில் உள்ள செவிடர்களும், ஊமைகளும், ஆவார்கள். கடவுள் தான் நாடுவோரை வழி கேட்டிற்கு அனுப்புகின்றார், மேலும் தான் நாடுவோரை நேரான பாதையில் அழைத்துச் செல்கின்றார்.
[6:38] பூமியின் மேலுள்ள எல்லா படைப்புகளும், மேலும் இறக்கைகளைக் கொண்டு பறக்கும் எல்லாப் பறவைகளும் உங்களைப்போன்ற சமூகங்களே. இந்தப் புத்தகத்தில்** நாம் எதையும் விட்டுவிடவில்லை. இந்த படைப்பினங்கள் அனைத்தும், அவற்றின் இரட்சகரிடத்தில் ஒன்று கூட்டப்படும்.
[6:40] “கடவுள்-ன் தண்டனை உங்களுக்கு வந்துவிட்டாலோ அல்லது அந்தநேரம் வந்து விட்டாலோ: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐத் தவிர மற்றவரிடம் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்களா?” என்று கூறுவீராக.