குர்ஆன் 6:43 — கால்நடை
நம்முடைய சோதனை அவர்களை வருத்திய போது அவர்கள் மட்டும் இறைஞ்சிப் பிரார்த் தித்திருந்தால்! மாறாக, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும் சாத்தான் அவர்களுடைய செயல்களை, அவர் களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கி விட்டான்.
[6:42] உங்களுக்கு முந்தைய சமூகங்களுக்கு நாம் (தூதர்களை) அனுப்பினோம், மேலும் அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை நாம் துன்பம் மற்றும் பெருங்கஷ்டம் மூலமாக சோதனையில் ஆழ்த்தினோம்.
[6:44] இவ்வாறாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியை, அவர்கள் புறக்கணிக்கும் போது, நாம் அவர்களுக்காக அனைத்தின் வாயில் களையும் திறந்துவிடுகின்றோம். பின்னர் அவர்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் அவர்களைத் திடீரெனத் தண்டிக்கின்றோம்; அவர்கள் முற்றிலுமாக அதிர்ச்சி அடைந் தவர்களாக ஆகின்றனர்.