குர்ஆன் 6:45 — கால்நடை
தீயவர்கள் இவ்விதமாக அழிக்கப்படுகின்றனர். புகழ் அனைத்தும், பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே உரியது.
[6:44] இவ்வாறாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியை, அவர்கள் புறக்கணிக்கும் போது, நாம் அவர்களுக்காக அனைத்தின் வாயில் களையும் திறந்துவிடுகின்றோம். பின்னர் அவர்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் அவர்களைத் திடீரெனத் தண்டிக்கின்றோம்; அவர்கள் முற்றிலுமாக அதிர்ச்சி அடைந் தவர்களாக ஆகின்றனர்.
[6:46] “கடவுள் உங்களுடைய செவிப்புலனையும், உங்களுடைய பார்வைப்புலனையும் எடுத்து விட்டால், மேலும் உங்களுடைய மனங்களில் முத்திரையிட்டுவிட்டால் என்ன செய்வீர்கள், கடவுள்-ஐத் தவிர, வேறு எந்த தெய்வம் இவற்றை உங்களுக்கு திரும்ப தர இயலும்?” என்று கூறுவீராக. வெளிப்பாடுகளை எவ்வாறு நாம் விளக்குகின்றோம் என்பதையும், மேலும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!