குர்ஆன் 6:64 — கால்நடை
“கடவுள் இம்முறையும், அதே போல் மற்ற நேரங் களிலும் உங்களைக் காப்பாற்றவே செய்கின் றார். அதன் பிறகும் நீங்கள் அவருக்கு இணைகளை ஏற்படுத்தவே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[6:63] “நிலத்திலோ அல்லது கடலிலோ உள்ள இருள் களில் இருந்து யாரால் உங்களைக் காப்பாற்ற இயலும்?” என்று கூறுவீராக. “அவர் எங்களை இம்முறை காப்பாற்றினால், நாங்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்று அவரிடம் உரத்த சத்தத்துடனும் இரகசியமாகவும் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள்.
[6:65] “உங்களுக்கு மேலிருந்தும் அல்லது உங்களு டைய பாதங்களுக்கு கீழிருந்தும் தண்டனையை உங்கள் மீது பொழிய நிச்சயமாக அவர் ஆற்றல் உடையவர். அல்லது உங்களைப் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து மேலும் ஒருவர் மற்றவருடைய கொடுங்கோன்மையை அனுபவிக்கும்படி செய்ய அவரால் இயலும். அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக நாம், எவ்வாறு வெளிப்பாடுகளை விளக்குகின்றோம் என்பதை கவனிப்பீராக,” என்று கூறுவீராக.