குர்ஆன் 6:67 — கால்நடை
இதிலுள்ள ஒவ்வொரு முன் அறிவிப்பும் நடந்தே தீரும், மேலும் நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்.
[6:66] இது உண்மையாக இருந்தபோதிலும், உங்களு டைய மக்கள் இதை ஏற்க மறுத்து விட்டார்கள். “நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல” என்று கூறுவீராக.
[6:68] நம்முடைய வெளிப்பாடுகளைப் பரிகாசம் செய் பவர்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் வேறொரு விஷயத்தில் மூழ்கும் வரை அவர்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களை மறக்கும்படிச் செய்து விட்டால், அதன்பிறகு உங்களுக்கு நினைவு வந்தவுடன் இத்தகைய தீய மக்களுடன் அமர்ந்திருக்காதீர்கள்.