Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:79 — கால்நடை

“வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய அந்த ஒருவருக்கே நான் என்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன்; நான் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்க மாட்டேன்.”

[6:78] சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது, “இது தான் என்னுடைய இரட்சகராக இருக்க வேண்டும். இது மிகப்பெரியது” என்று கூறினார். ஆனால் அது அஸ்தமித்த போது அவர் கூறினார், “என்னுடைய மக்களே, உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை நான் பகிரங்கமாக கண்டனம் செய்கின்றேன்.

[6:80] அவருடைய மக்கள் அவரிடம் தர்க்கம் செய் தனர். அவர் கூறினார், “கடவுள் என்னை வழி நடத்தியதன் பின்னர். அவரைப்பற்றி என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? நீங்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங்களிடம் எனக்கு பயம் இல்லை. என்னுடைய இரட்சகர் நாடாதவரை எனக்கு எதுவும் நேராது. என் இரட்சகருடைய பேரறிவு எல்லா பொருட்களையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?