Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:81 — கால்நடை

“உங்களுடைய இணைத் தெய்வங்களுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்? உங்களுக்கு உதவுவதற்கு முற்றிலும் சக்தியற்ற இணைத் தெய்வங்களை கடவுள்-க்கு பதிலாக வழிபடு பவர்களாக நீங்கள் இருப்பதால், நீங்கள் தான் பயப்பட வேண்டும். நீங்கள் அறிவீர்களானால், எந்தத் தரப்பு பாதுகாப்பிற்கு மிகவும் தகுதியானது?”

[6:80] அவருடைய மக்கள் அவரிடம் தர்க்கம் செய் தனர். அவர் கூறினார், “கடவுள் என்னை வழி நடத்தியதன் பின்னர். அவரைப்பற்றி என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? நீங்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங்களிடம் எனக்கு பயம் இல்லை. என்னுடைய இரட்சகர் நாடாதவரை எனக்கு எதுவும் நேராது. என் இரட்சகருடைய பேரறிவு எல்லா பொருட்களையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?

[6:82] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் தங்களுடைய நம்பிக்கையை, இணைத்தெய்வ வழிபாட்டைக் கொண்டு களங்கப்படுத்தாமலிருக்கின்றார் களோ அவர்கள் முழுமையான பாதுகாப்பிற்குத் தகுதியாகி விட்டார்கள், மேலும் அவர்கள் தான் உண்மையாகவே வழி நடத்தப்பட்டவர்கள்.