குர்ஆன் 6:82 — கால்நடை
எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் தங்களுடைய நம்பிக்கையை, இணைத்தெய்வ வழிபாட்டைக் கொண்டு களங்கப்படுத்தாமலிருக்கின்றார் களோ அவர்கள் முழுமையான பாதுகாப்பிற்குத் தகுதியாகி விட்டார்கள், மேலும் அவர்கள் தான் உண்மையாகவே வழி நடத்தப்பட்டவர்கள்.
[6:81] “உங்களுடைய இணைத் தெய்வங்களுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்? உங்களுக்கு உதவுவதற்கு முற்றிலும் சக்தியற்ற இணைத் தெய்வங்களை கடவுள்-க்கு பதிலாக வழிபடு பவர்களாக நீங்கள் இருப்பதால், நீங்கள் தான் பயப்பட வேண்டும். நீங்கள் அறிவீர்களானால், எந்தத் தரப்பு பாதுகாப்பிற்கு மிகவும் தகுதியானது?”
[6:83] எதனைக் கொண்டு நாம் ஆப்ரஹாமிற்கு அவருடைய சமூகத்தாருக்கெதிராக ஆதர வளித்தோமோ அந்த நம்முடைய வாதம் இவ்விதமாகவே இருந்தது. நாம் நாடும் எவர்களையும் உன்னதமான அந்தஸ்து களுக்கு நாம் உயர்த்துகின்றோம். உங்களு டைய இரட்சகர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.