குர்ஆன் 6:83 — கால்நடை
எதனைக் கொண்டு நாம் ஆப்ரஹாமிற்கு அவருடைய சமூகத்தாருக்கெதிராக ஆதர வளித்தோமோ அந்த நம்முடைய வாதம் இவ்விதமாகவே இருந்தது. நாம் நாடும் எவர்களையும் உன்னதமான அந்தஸ்து களுக்கு நாம் உயர்த்துகின்றோம். உங்களு டைய இரட்சகர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:82] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் தங்களுடைய நம்பிக்கையை, இணைத்தெய்வ வழிபாட்டைக் கொண்டு களங்கப்படுத்தாமலிருக்கின்றார் களோ அவர்கள் முழுமையான பாதுகாப்பிற்குத் தகுதியாகி விட்டார்கள், மேலும் அவர்கள் தான் உண்மையாகவே வழி நடத்தப்பட்டவர்கள்.
[6:84] மேலும் நாம் அவருக்கு ஐசக் மற்றும் ஜேக்கப்பை அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நாம் வழி நடத்தினோம். அதே போல் அதற்கு முன்பு நாம் நோவாவை வழி நடத்தினோம், மேலும் அவருடைய சந்ததியரில் டேவிட், ஸாலமன், ஜோப், ஜோஸஃப், மோஸஸ் மற்றும் ஆரோன் ஆகியோரையும் (நாம் வழி நடத்தினோம்). இவ்வாறு நன்னெறியாளர் களுக்கு நாம் வெகுமதி அளிக்கின்றோம்.