குர்ஆன் 6:84 — கால்நடை
மேலும் நாம் அவருக்கு ஐசக் மற்றும் ஜேக்கப்பை அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நாம் வழி நடத்தினோம். அதே போல் அதற்கு முன்பு நாம் நோவாவை வழி நடத்தினோம், மேலும் அவருடைய சந்ததியரில் டேவிட், ஸாலமன், ஜோப், ஜோஸஃப், மோஸஸ் மற்றும் ஆரோன் ஆகியோரையும் (நாம் வழி நடத்தினோம்). இவ்வாறு நன்னெறியாளர் களுக்கு நாம் வெகுமதி அளிக்கின்றோம்.
[6:83] எதனைக் கொண்டு நாம் ஆப்ரஹாமிற்கு அவருடைய சமூகத்தாருக்கெதிராக ஆதர வளித்தோமோ அந்த நம்முடைய வாதம் இவ்விதமாகவே இருந்தது. நாம் நாடும் எவர்களையும் உன்னதமான அந்தஸ்து களுக்கு நாம் உயர்த்துகின்றோம். உங்களு டைய இரட்சகர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:85] இன்னும், ஜக்கரியா, ஜான், இயேசு மற்றும் எலியாஸ், இவர்கள் அனைவரும் நன்னெறி யாளர்களாக இருந்தார்கள்.