குர்ஆன் 6:85 — கால்நடை
இன்னும், ஜக்கரியா, ஜான், இயேசு மற்றும் எலியாஸ், இவர்கள் அனைவரும் நன்னெறி யாளர்களாக இருந்தார்கள்.
[6:84] மேலும் நாம் அவருக்கு ஐசக் மற்றும் ஜேக்கப்பை அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நாம் வழி நடத்தினோம். அதே போல் அதற்கு முன்பு நாம் நோவாவை வழி நடத்தினோம், மேலும் அவருடைய சந்ததியரில் டேவிட், ஸாலமன், ஜோப், ஜோஸஃப், மோஸஸ் மற்றும் ஆரோன் ஆகியோரையும் (நாம் வழி நடத்தினோம்). இவ்வாறு நன்னெறியாளர் களுக்கு நாம் வெகுமதி அளிக்கின்றோம்.
[6:86] மேலும் இஸ்மவேல், எலீசா, ஜோனா மற்றும் லோத், இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் எல்லா மக்களுக்கும் மேலாக கௌரவித்தோம்.