Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:10 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தான் நரக நெருப்பில் வசிப் பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!

[64:9] ஒன்று கூட்டுகின்ற அந்நாளுக்காக உங்களை அவர் வரவழைக்கின்ற அந்நாள் வரும். அதுதான் பரஸ்பரம் பழித்துக் கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[64:11] கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொரு வர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.