Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:11 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொரு வர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[64:10] நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தான் நரக நெருப்பில் வசிப் பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!

[64:12] நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதேயாகும்.