குர்ஆன் 64:12 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதேயாகும்.
[64:11] கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொரு வர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[64:13] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.