Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:9 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

ஒன்று கூட்டுகின்ற அந்நாளுக்காக உங்களை அவர் வரவழைக்கின்ற அந்நாள் வரும். அதுதான் பரஸ்பரம் பழித்துக் கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[64:8] ஆகையால், நீங்கள் கடவுள் மற்றும் அவரு டைய தூதர் மீதும், மேலும் இதில் நாம் வெளிப் படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[64:10] நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தான் நரக நெருப்பில் வசிப் பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!