Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:8 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

ஆகையால், நீங்கள் கடவுள் மற்றும் அவரு டைய தூதர் மீதும், மேலும் இதில் நாம் வெளிப் படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[64:7] நம்பமறுப்பவர்கள் தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[64:9] ஒன்று கூட்டுகின்ற அந்நாளுக்காக உங்களை அவர் வரவழைக்கின்ற அந்நாள் வரும். அதுதான் பரஸ்பரம் பழித்துக் கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.