Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:7 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

நம்பமறுப்பவர்கள் தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[64:6] இது ஏனெனில் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், “நம்மைப் போன்ற மனிதர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?” என்று கூறினார்கள். அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். கடவுள்-க்கு அவர்கள் தேவை இல்லை. கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.

[64:8] ஆகையால், நீங்கள் கடவுள் மற்றும் அவரு டைய தூதர் மீதும், மேலும் இதில் நாம் வெளிப் படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.