குர்ஆன் 64:6 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
இது ஏனெனில் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், “நம்மைப் போன்ற மனிதர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?” என்று கூறினார்கள். அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். கடவுள்-க்கு அவர்கள் தேவை இல்லை. கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[64:5] கடந்த காலத்தில் நம்ப மறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவு களை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்திருக் கின்றீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.
[64:7] நம்பமறுப்பவர்கள் தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.